அன்புநிறை பெற்றோரே, அருமை மாணவச் செல்வங்களே!
தமிழ்நாட்டின் கிராமப்புறப் பெற்றோரின் மனங்களில் பல கனவுகள் : ‘நமது பிள்ளைகள் கலெக்டர்களாக வரமுடியுமா? போலீஸ் அதிகாரிகள் ஆவார்களா அவர்கள்? ஃபாரஸ்ட் ஆபீஸர்களாக, வங்கி அதிகாரிகளாக ஆக முடியுமா?’ அவர்களுடைய பிள்ளைகளுக்கும் இதே கனவுகள் இருக்கும். தங்கள் பெற்றோரின் ஆசைக் கனவுகளை நனவாக்கி வாழ்க்கையில் உயர்நிலை அடைய வேண்டுமென பிள்ளைகள் நினைப்பார்கள்.
பொருளாதார நிலையில் பின்தங்கியிருந்தாலும் திறமைகள் நிறைந்தவர்களாய், செயற்திறனும்-ஆர்வத்துடிப்பும் மிகுந்தவர்களாய் இருப்பவர்கள் ஏராளம். இத்தகைய இளைஞர்கள்-இளம்பெண்களின் ஆசைக் கனவுகள் நிஜமாவதற்கும், அவர்தம் பெற்றோர்களின் இலட்சியங்கள் நிறைவேறுவதற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். நமக்கு வாய்ப்புகள் கிடைக்குமா என ஏங்குகிற பெற்றோருக்கும் – மாணவர்களுக்கும் ஒரு நற்செய்தி: இதோ, சென்னையில் சிகரம் ஐஏஎஸ் பயிற்சி மையம் உருவாகி இருக்கிறது.
தமிழ்ச் சமூக வாழ்க்கையில் மூன்று பிரபலமான, வெவ்வேறு துறைகளில் சிகரங்களை எட்டியுள்ளவர்களான வெற்றியாளர்களின் முன்முயற்சியில் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் பொருளாதார, சமூகப் பின்னணி எதுவாக இருந்தாலும் உங்களிடம் திறமைகள் இருந்தால், உழைப்பும்-ஆர்வமும் இருந்தால் நீங்களும் கலெக்டராகலாம், போலீஸ் உயரதிகாரியாகலாம்!
யார் அந்த மூன்று வெற்றியாளர்கள்?

திரு.‘பரணி’ கே.பாலசுப்ரமணி
செயலாளர்
‘பரணி’ கே.பாலசுப்ரமணி, பொறியாளர். ஒன்பதாண்டு காலம் (1985-1994) அரசு பொதுப் பணித்துறையில் பொறியாளராகப் பணியாற்றியவர். பின் ‘பாலு என்ஜினியரிங்’..

திரு.சிவகுமார்
தலைவர்
திரு.சிவகுமார். தமிழ்த் திரையுலக மார்க்கண்டேயன்; 1965-இல் இருந்து 192 திரைப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்.சென்னை கவின்கலைக் கல்லூரியில் முறையாகப் பயின்ற..

டாக்டர்.பி.சி.துரைசாமி
பொருளாளர்
‘சக்தி மசாலா’ நிர்வாக இயக்குநர் டாக்டர்.பி.சி.துரைசாமி. உணவுப் பொருட்கள் தயாரிப்புத் தொழிலில் 38 ஆண்டுகள் அனுபவம் பெற்ற சக்திமசாலா குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர்..
சங்கர் ஐ.ஏ.எஸ். மைய இயக்குநர் – திரு. சங்கர்.
பயிற்சி வழங்கும் நிறுவனத் தலைவர் | திரு. D. சங்கர் |
பிறந்த ஊர் | நல்ல கவுண்டம் பாளையம் |
தந்தையார் | தேவராஜன் |
தாயார் | தெய்வானை |
துணைவியார் | டாக்டர். எஸ். வைஷ்ணவி |
குழந்தைகள் | சஹானா, சாதனா |
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டின் கிராமப்புறப் பின்னணியிலிருந்து உருவாகி வந்தவரான திரு.சங்கர் தனது அகாடமியை இந்தியாவின் உச்சநிலை நிர்வாகவியல் திறன்களுக்கான முதன்மை மூல வள மையமாக வளர்த்தெடுத்துள்ளார். இந்த வளர்ச்சிக்கு அடிப்படை அவரே குடிமைப் பணித் தேர்வுகளை எழுதிப் பெற்ற அனுபவ ஞானம் ஆகும்.
சென்னை அண்ணாநகரில் திரு.சங்கர் அவர்களால் நிறுவப்பட்டுள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமி, தென்னிந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் முதலிடம் பெற்றுள்ள புகழ் வாய்ந்த பயிற்சி நிறுவனமாகும். 2004-ஆம் ஆண்டில் 36 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த அகாடமியில் தற்போது ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) முதன்மைப் பதவிகளுக்கான தேர்வுகளுக்கு 1500க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெறுகின்றனர். இந்த நிறுவனத்திலிருந்து பயிற்சி பெற்றவர்களுள் IAS, IPS, IFS போன்ற மிகச் சிறந்த உயர் பதவிகளில் இதுவரை 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு பெற்று பணியில் அமர்ந்துள்ளனர்.
தேர்வுக்கான காலநிரல் |
---|
வயது வரம்பு |
24 மற்றும் அதற்கு கீழ் |
விண்ணப்பிக்க கடைசி நாள் |
- |
தேர்வு நேரம் |
- |
நுழைவு தேர்வு தேதி |
- |
நுழைவுத்தேர்வு முடிவுகள் |
- |
நேர்முகத்தேர்வு தேதி |
- |
நேர்முகத்தேர்வு முடிவுகள் |
- |
பயிற்சி கொடுக்கும் இடம் |
சங்கர் IAS அகாடமி, சென்னை. |
பயிற்சி வகுப்புகள் துவங்கும் நாள் |
- |
வழங்கப்படும். www.shankariasacademy.com
Return policy |
---|
If candidates not receiving your hall ticket through mail id or by the website, after confirmation we will refund your transaction amount through your account with in a month. |
Refund policy |
---|
Candidates once applied for the entrance exam and received your hall ticket, amount will not be refundable. |
Privacy Policy |
---|
Click here for Privacy Policy |
Terms and Conditions |
---|
Click here for Terms and Conditions |